அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் பாடசாலை மாணவர்கள், அத்துடன் நாடளாவிய ரீதியில் அரச அங்கீகாரம் பெற்ற பிரிவெனாக்களில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்கள் மற்றும் ஏனைய மாணவர்களுக்கும் இவ்வாறு இலவச சீருடை வழங்கப்படவுள்ளது.
சீன மக்கள் குடியரசினால் முழுமையான அன்பளிப்பாக 11.484 மில்லியன் மீற்றர் சீருடைத் துணிகள் நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், தற்போது அந்த அனைத்துத் துணிகளும் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
குறித்த சீருடைத் துணிகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்கும் நிகழ்வு, எதிர்வரும் ஜனவரி 13 ஆம் திகதி கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்முறை பாடசாலை சீருடைகளைப் பெற்றுக்கொள்ள சுமார் 4,418,404 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன், ஜனவரி 19 ஆம் திகதி முதல் கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு அத்துணித் தொகைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



