தொடர்மாடி குடியிருப்பின் சீமெந்து கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் பலி !



கொழும்பு முகத்துவாரம் பிரதேசத்தில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் உள்ள சீமெந்து கூரை இடிந்து விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (5) இடம்பெற்றுள்ளது.

இச்சிறுவன் தனது பாட்டியுடன் தொடர்மாடி குடியிருப்பிற்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது, திடீரென தொடர்மாடி குடியிருப்பின் சீமெந்து கூரை இடிந்து சிறுவன் மீது விழுந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்மாடி குடியிருப்பின் சீமெந்து கூரை திடீரென இடிந்து விழுந்ததற்கான காரணத்தைக் கண்டறிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.