களுத்துறையில் பேருவளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (5) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தன்று, இவ்வாண்டு இடம்பெறவுள்ள க .பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்காக இடம்பெற்ற விசேட வகுப்பில் கலந்துகொண்ட இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர் குழுக்களுக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறில் 7 மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .













