( எஸ்.எஸ்.அமிர்தகழியான் )
மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் சிகிச்சை நிலையம் சுதாதார அமைச்சின் பிரதிபணிப்பாளர் நாயகம் எஸ்.மகேந்திர ஆலோட் அவர்கள் இன்று (04) திறந்து வைத்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிரேஸ்ட தோல் சிகிச்சை வைத்திய நிபுணர் ரி.தமிழ்வண்ணன், மாவட்ட தொழுநோய் வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் லிபோஜிதா மற்றும் ஏனைய பொறுப்பு வைத்தியர்கள், சுதாதார பரிசோதகர்கள், தாதியர்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நோயாளர்களின் நலன் கருதி ஆரையம்பதியிலும் இதற்குரிய சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கருத்து தெரிவித்த சுதாதார அமைச்சின் பிரதிபணிப்பாளர் நாயகம் தொழுநோயானது ஒரு தொற்று நோயாகும். இந்நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை வழங்குவதனால் பரவலை கட்டுப்படுத்தி பூரண குணம் பெறமுடியும். இந் நோயிற்கு சிகிச்சை பெறத்தவரும் நோயாளியின் நரம்புகளையும், தோலையும்பாதிக்கின்றது. இந் நோயின் அறிகுறியை அவதானித்தவுடன் சிகிச்சை பெற்றால் குணமாக்க முடியும் என இதன்போது தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பிராந்திய சுகாதார பணிப்பாளர் எதிர்வரும் காலங்களில் நோயாளர் நலன் கருதி வாழைச்சேனை பிரதேசத்திலும் இவ்வாறான சிகிச்சை நிலையம் ஒன்று ஆரம்பிக்க உள்ளதாக இதன் போது தெரிவித்தார்.
ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொழுநோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு ! https://www.battinews.com/2026/02/blog-post_05.html .
Posted by Battinews on Wednesday, February 4, 2026













.webp)