சுதந்திர தினத்தை கரிநாள் என வலியுறுத்தி மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி



இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாள் என வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், பொது அமைப்புக்களின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து காந்திப் பூங்கா வரை இன்று (04) பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி தற்போது இடம்பெற்றது .

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டுள்ளோர் பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

இக் கவனயீர்ப்புப் பேரணிக்கு வலுச் சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத், ஸ்ரீநேசன் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சமூக சிவில் பொது அமைப்புக்களின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.