துங்கல்பிட்டிய பொலிஸார் மற்றும் நீர்கொழும்பு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினர் இணைந்து நடத்திய சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து, 969 கிலோகிராம் 100 கிராம் பீடி இலைகள் கொண்ட 32 பைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மற்றைய சந்தேகநபரிடமிருந்து, 897 கிலோகிராம் 700 கிராம் பீடி இலைகள் கொண்ட 28 பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர்கள் பிட்டிபன மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்த 60 மற்றும் 63 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது,
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துங்கல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













