
(சித்தா)
சிடாஸ் அமைப்பின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/மமே/பன்குடாவெளி றோ.க.த.க.பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு விஞ்ஞானம், கணிதம், தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளின் அங்குரார்ப்பன வைபவம் 2026.02.06 வெள்ளிக்கிழமையன்று பாடசாலையின் அதிபர் ஆர்.செந்தில்நாதன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிடாஸ் அமைப்பின் தலைவர் முத்துராஜா புவிராஜா, அமைப்பின் செயலாளர் வேலாயுதம் செல்வராஜா. பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் ஜே.றொபின்சன், பழைய மாணவர் சங்க உறுப்பினர் ரி.ஐங்கரன் மற்றும் வளவாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.















