மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு MCC-UK கிளையினரால் நான்கு இலட்சம் பெறுமதியான இசைக்கருவிகள் கையளிப்பு


( விஜயரெத்தினம்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இசைக்குழுக்களுக்கு நான்கு இலட்சம் பெறுமதியான இசைக்கருவிகள் அதிகாரப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இங்கிலாந்து கிளையினரால் வழங்கப்பட்ட இசைக்கருவிகள், பாடசாலைக்கு அதிகாரப்பூர்வமாக கடந்த வெள்ளிக்கிழமை (24) கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாடசாலையின் பதில் அதிபர் எஸ்.சதீஸ்குமார்,கலை மற்றும் மேற்கத்திய இசைக்குழுக்களுக்கு பொறுப்பான ஆசிரியை திருமதி.ஷெரோண் ராகல் மற்றும் பிரதியதிபர் திருமதி.மாலினி நடராஜா ஆகியோர்களிடம் குறித்த இசைக்கருவிகளை முறையாக கையளித்தார்கள்.

இத்திட்டத்தின் கீழ் டிரம்பெட், சைட் டிரம், பேஸ்டிரம், மிருதங்கம் மற்றும் நாதஸ்வரம் உள்ளிட்ட இசைக்கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இசைக்கருவிகளின் மொத்தப் பெறுமதி நான்கு (403,000.00)இலட்சமாகும்.

இவ்விசைக்கருவிகள், மாணவர்களின் இசைத்திறன் மேம்பாட்டிற்கு உதவுவதுடன்,பாடசாலை நிகழ்வுகள்,கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் பொதுவிழாக்களில் இசைக்குழுக்களின் செயல்திறனை ஊக்குவித்து மாணவர்களை இசைத்துறைக்கு ஆளாக்கி மாணவர்களின் மனப்பாங்கு விருத்தியடைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கண்ட பங்களிப்பிற்காக, பழைய மாணவர் சங்கத்தின் இங்கிலாந்து கிளையினருக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளையும்,பாராட்டுக்களையும் தெரிவித்ததாக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் எந்திரி.உ.மயூரன் தெரிவித்தார்.