இலங்கை - மாலைதீவு இடையில் 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு மற்றும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற அரச தலைவர்களுக்கிடையிலான சந்திப்பைத் தொடர்ந்து 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
அதன்படி, சுற்றுலாத் துறை, கல்வி மற்றும் உயர்கல்வி, சுகாதாரத் துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் அபிவிருத்தி, ஆவணக்காப்பகம் மற்றும் பாதுகாப்புத் துறை ஆகிய 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த உடன்படிக்கைகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













.jpg)