இலங்கை - மாலைதீவு இடையில் 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

மாலைதீவு - இலங்கை உறவுகளில் புதியதொரு அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில், 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்வில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவுடன் இன்று (04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துகொண்டேன்.

 சுற்றுலாத்துறை ஒத்துழைப்பு, இரு நாடுகளின் தேசிய ஆவணக்காப்பகங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பாதுகாப்புப் பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலைத் தலைவர்களுக்கான பயிற்சி மற்றும் தொழில் அபிவிருத்தி, விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாடு தொடர்பான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை இதில் அடங்குகின்றன.
 
அத்துடன், மாலைதீவின் பாதுகாப்பு மற்றும் தேசிய சேவைகள் அமைச்சுக்கும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் இடையிலும், கொழும்பு பல்கலைக்கழகத்திற்கும் மாலைதீவின் சுகாதார, குடும்ப மற்றும் நலன்புரி அமைச்சுக்கு இடையிலும் கல்வி ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.