முன்பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடு - ஜூலை 1க்குள் பதிவு அவசியம்


இலங்கையில் செயல்பட்டு வரும் அனைத்து முன்பள்ளிகளும் (Preschools) புதிய விதிமுறைகளின் கீழ் ஜூலை 01க்குள் கட்டாயமாக பதிவு செய்யவோ அல்லது தங்களது பதிவை புதுப்பிக்கவோ வேண்டும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்  தெரிவித்துள்ளார்.

குறித்த காலக்கெடுவை பின்பற்றாத முன்பள்ளிகள் பதிவு செய்யப்படாதவையாக பட்டியலிடப்பட்டு பொதுமக்களுக்கு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய விதிகளின் படி, அரசின் தரநிலைகளை பூர்த்தி செய்து பதிவு செய்யப்பட்ட பிறகே முன்பள்ளிகள் புதிய மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்படும்.

மேலும், தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்கு முன், அந்த முன்பள்ளி பதிவு செய்யப்பட்டதா என்பதை பெற்றோர் சரிபார்க்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.