இலங்கைத் திறைசேரியின் மின்னஞ்சல் கட்டமைப்பிற்குள் (Email System) சட்டவிரோதமாக ஊடுருவி, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்த சம்பவம் தொடர்பில், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவின் (FBI) உதவியைப் பெறப் புலனாய்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இத்தகவலைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
மின்னஞ்சல் ஊடுருவல் (Hacking) மற்றும் தகவல் திருட்டு (Phishing) ஆகியவற்றைக் கண்டறிவதில் நிபுணத்துவம் பெற்ற அமெரிக்க சைபர் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் ஆலோசனைகளும் இந்த விசாரணைகளுக்காகப் பெறப்பட்டுள்ளன.
இந்த மோசடி மின்னஞ்சல்கள் எங்கிருந்து ஆரம்பிக்கப்பட்டன, திருடப்பட்ட பணம் தற்போது எங்கே உள்ளது அல்லது இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்து மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவும் (FIU) விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. தற்போது அவுஸ்திரேலிய அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளதால், இது ஒரு சர்வதேச மட்டத்திலான விசாரணையாக உருவெடுத்துள்ளது.
கடந்த ஜனவரி மாதமே இந்த சைபர் தாக்குதல் குறித்து நிதி அமைச்சு அறிந்திருந்த போதிலும், மார்ச் 28 ஆம் திகதியே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் உத்தியோகபூர்வமாகப் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக் கடன் திருப்பிச் செலுத்துதல் தொடர்பான சில ஆவணங்களும் இந்த சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டிருக்கலாம் அல்லது பிரதி எடுக்கப்பட்டிருக்கலாம் எனத் திறைசேரியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக, இனிவரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பணப் பரிமாற்றங்களுக்கு முன்னரும், மின்னஞ்சல்கள் மற்றும் தரவுகளைத் தீவிரமாகப் பரிசோதிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரான்ஸ் நாட்டுடனான கடன் ஆவணங்கள் காணாமல் போயுள்ளதாக வெளியான செய்திகளை நிதி அமைச்சு மறுத்துள்ளது. கடன் வழங்குநர்களுடன் முறையான தொடர்புகளைப் பேணி வருவதாகவும், கடன் தவணைகள் முறையாகச் செலுத்தப்படுவதாகவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இந்த 2.5 மில்லியன் டொலர் காணாமல் போனமை மற்றும் மேலதிகமாக ஏதேனும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்துப் பரந்தளவிலான விசாரணைகள் நடைபெற்று வருவதாகக் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் CID தெரிவித்துள்ளது. இந்த பாரிய சைபர் கொள்ளை குறித்து ஆராய, சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய நிபுணர் குழுவொன்றை நியமிக்க நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

.jpg)
.jpg)