
இலங்கையில் தங்குவதற்கான விசா காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டவர்கள், பம்பலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் இன்று திங்கட்கிழமை (4) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 48 பேர், சீன ஜாதியினர் 02 பேர் என மொத்தமாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 33 ஆண்களும் 17 பெண்களும் உள்ளடங்குவதோடு, கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாவர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது வெலிசர தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்படுவதுடன், அவர்களை விரைவாகத் தத்தமது நாடுகளுக்கு நாடுகடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.












.jpg)