
வெலிக்கடை சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி ஒருவர், திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதி சிறையில் இருந்து தப்பிச்சென்ற நிலையில், அதிகாரிகளின் பெரும் முயற்சிக்குப் பின் அவரை மீண்டும் பிடித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைதியின் குடும்ப உறவினர்கள், சிறை அதிகாரிகள் அவரைக் கொடூரமாகத் தாக்கியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
வெலிக்கடை சிறையில் போதைப்பொருள் குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவர், நேற்று (03) பிற்பகல் சிறையில் உள்ள விளையாட்டு மைதானத்தை சுத்தம் செய்வதற்காக அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையிலேயே கைதி தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தப்பிச்சென்ற கைதியை உடனடியாகப் பின்தொடர்ந்த சிறை அதிகாரிகள், பெரும் முயற்சிக்குப் பின் பொரெள்ள பகுதியில் வைத்து கைது செய்தனர்.
அப்போது கைதிக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு கைதி மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே மற்றொரு சம்பவம் நிகழ்ந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு கடுமையாக நோய்வாய்ப்பட்டதாகக் கூறப்படும் கைதி, சிறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, சிறைக்கைதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் பொரெள்ள பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஆர். ஓஷத சஞ்சீவ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் சுமார் 110 மில்லி கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும், அந்த 5,000 ரூபா அபராதத்தைச் செலுத்தத் தவறியதால் அவருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
. .
அதிகம் வாசிக்கப்பட்டவை - 7 நாட்கள்
LATEST NEWS
10/recent/recentPost
குற்றம் - CRIME NEWS
6/crime/block_4












.jpg)