ஊர்காவற்துறை - மெலிஞ்சிமுனை பகுதியைச் சேர்ந்த அனிஸ்ரன் மேரி அபிநயா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த யுவதி இளவாலை திருக்குடும்ப கன்னியர் மடத்தில் கடந்த மூன்று மாதங்களாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்றையதினம் கிணற்றினுள் தவறி விழுந்துள்ளார்.
பின்னர் அவரை மீட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.












.jpg)
.jpg)