பெண் ஒருவர் உட்பட இருவர் கொலை..!

நாட்டின் இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

பிட்டிகல, ஹொரங்கல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 60 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதாலேயே இந்த கொலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது காயமடைந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், திஸ்ஸமஹாராம - கெமுனுபுர பகுதியில் வீடொன்றுக்குள் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் உடலில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதுடன், கொலையைச் செய்த சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவத்தில் கெமுனுபுர பகுதியைச் சேர்ந்த 88 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.