கல்முனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது



( பாறுக் ஷிஹான்)

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகில் இன்று (8) மதியம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது  இளைஞன் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார்.

28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான இளைஞனிடம் இருந்து 25 கிராம் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சந்தேக நபர் அண்மைக்காலமாக அப்பகுதி இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை இரகசியமாக விநியோகித்து வருபவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த சுற்றி வளைப்பானது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்விடயம் குறித்து சட்ட நடவடிக்கைகளை கல்முனை தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.