
இலங்கையில் நாளை (06) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கைக்கு அண்மித்த பகுதியில், வெப்பமண்டலங்களுக்கிடையிலான ஒருங்கமைவு வலயம் (ITCZ) மற்றும் அதனுடன் தொடர்புடைய கீழ் வளிமண்டலக் குழப்பநிலை உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால் இந்த மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த வளிமண்டல அமைப்பின் நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றது.
இது தொடர்பான எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் வானிலை அறிக்கைகளை பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.












.jpg)