
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வடமராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் நள்ளிரவு வேளையில் மதுபோதையில் இருந்த இருவர் அத்துமீறி நுழைந்து மிக மோசமான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த இளைஞரை மோசமாக தாக்கியதில், அவர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பிறகு அவர்கள் வீட்டின் உடமைகளையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அதனையடுத்து, பாதிக்கப்பட்ட நபரால் சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொடங்கியுள்ள மருதங்கேணி பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.












.jpg)