தமிழை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சிவசங்கரி கங்கேஸ்வரன் தெரிவித்தார். மேலும் தமிழ் மொழியை வெறும் மேடைப் பேச்சோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அதனை அன்றாட வாழ்வில் சிந்திப்பதற்கும் பயன்படுத்துவதற்கும் நாம் பழகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற வலயமட்ட தமிழ் மொழித்தினப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தினார். இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் மொழி மாற்றமடைந்து வரும் வேளையில், ஆசிரியர்களும் மாணவர்களும் ஏனையோருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து தமிழ் மொழியையும் அதன் அடையாளத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், தற்போதைய தமிழ்ச் சமூகத்தில் அதிகமான பெயர்கள் தமிழ் மொழி சாராதவையாகவும், அர்த்தமற்றவையாகவும் இருப்பது கவலைக்குரியது எனச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மொழியை நேசிப்பதோடு மட்டுமல்லாமல் அதன் தனித்துவத்தைப் பாதுகாப்பதில் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவது மிக முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.













.jpg)