இன்று (06) புதன்கிழமை நண்பகல் வெளியிடப்பட்ட இந்த அவசர எச்சரிக்கை, இன்று இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் இன்றையதினம் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், அப்பகுதிகளில் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இடியுடன் கூடிய மழை பெய்யும் தற்காலிகக் காலங்களில், அப்பகுதிகளில் சில இடங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளகப் பகுதிகளில் புகலிடம் தேடுங்கள், மரங்களின் கீழ் ஒருபோதும் நிற்க வேண்டாம்.
இடிமுழக்கத்தின் போது நெல்வயல்கள், தேயிலை தோட்டங்கள், திறந்த நீர்நிலைகள் போன்றவற்றைக் தவிர்த்துக் கொள்ளவும்.
இடி முழகை்கத்தின் போது கம்பித் தொடர்புள்ள தொலைபேசி மற்றும் மின்னிணைப்பிலுள்ள மின் உபகரணங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
துவிச்சக்கர வண்டிகள், உழவியந்திரங்கள், படகுகள் திறந்த வாகனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளவும்.
விழக்கூடிய மற்றும் விழுந்த மரங்கள், மின் கம்பிகள் குறித்து அவதானமாக இருக்கவும்.
அவசர உதவிகளுக்கு உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.












.jpg)
