சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, நான்கு சட்ட வைத்திய நிபுணர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
திறைசேரியின் வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்தலின் போது, 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாவது தரப்பினருக்கு கைமாறிய சம்பவம் தொடர்பாக, நிதியமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ஷ உள்ளிட்ட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் ரங்க ராஜபக்ஷ நேற்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.
அவரது சடலம் அவரது வீட்டிற்கு அருகிலேயே கண்டெடுக்கப்பட்டது.
இது தற்கொலையா? அல்லது கொலையா? அல்லது விபத்தா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இது தொடர்பான நீதவான் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், மேலதிக பிரேதப் பரிசோதனைகளுக்காக சடலம் தற்போது குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.













.jpg)