ஏறாவூரில் கடத்திச் சென்று தாக்கப்பட்ட 16 வயது சிறுவன் விவகாரம் : சம வயதுடைய சிறுவன் கைது ; மேலும் 3 பேர் தலைமறைவு



ஏறாவூரில் 16 வயது சிறுவன் ஒருவரை கடத்திச் சென்று தாக்கிய சம்பவம் தொடர்பாக, சமூக ஊடகங்களில் வெளியான காணொளியின் அடிப்படையில் சம வயதுடைய சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் அளித்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் தலைமறைவாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த தாக்குதலில் காயமடைந்த சிறுவன் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.