அவ்வாறு கொண்டுவரப்பட்டு தரப்படும் லம்போர்கினி காரை ஓட்டுவதற்கு தான் ஆவலுடன் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த தேர்தல் காலத்தில் அரசியல் மேடைகளிலும் சமூக ஊடகங்களிலும் தீவிர விவாதப் பொருளாக இருந்த நாமலின் 18 லம்போர்கினி கார்கள் குறித்து கருத்து தெரிவித்த நாமல், இதுவரை அந்த வாகனங்களை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த திசைக்காட்டி கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த வாகனங்களின் இருப்பிடத்தைக் காட்டினால் அல்லது விமானம் மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படும் வாகனங்களைக் கண்டுபிடித்தால், அவற்றில் ஒன்றை ஓட்டுவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.



