ஷியாமலா பெரேரா தேசிய லொத்தர் சபையின் தலைவராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், சபையின் அங்கீகரிக்கப்பட்ட விதி முறைகளுக்குப் புறம்பாக, ஊழியர் சபையில் அவ்வாறான பதவிகள் இல்லாத பின்னணியிலும், எவ்வித வெற்றிடங்களுமின்றி மூன்று அதிகாரிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் நியமனங்களை வழங்கியுள்ளார். இரு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் ஒரு முகாமைத்துவ உதவி அதிகாரி ஆகியோருக்கே இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அன்றைய தினங்களில் நிதி அமைச்சராகப் பதவி வகித்த ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணிக்குழாமில் சேவைக்காக அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் தேசிய லொத்தர் சபைக்கு இந்த அதிகாரிகளிடமிருந்து எவ்வித சேவைகளும் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில், அவர்களுக்கான சம்பளம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை லொத்தர் சபையின் நிதியிலிருந்தே செலுத்துவதற்கு இவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி ஊழல் எனும் குற்றத்தை புரிந்தமைக்காக முன்னாள் தலைவர் ஷியாமலா பெரேரா இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் பத்தரமுல்ல, பெலவத்த பகுதியை சேர்ந்த ஷியாமலா பெரேரா இவ்வாறு இன்றையதினம் பிற்பகல் 1.30 மணியளவில் இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.



.jpg)
