நேற்று ( 26) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் பாணந்துறை கடற்கரையில் கடலில் இறங்கிக் குளித்தபோது, ஜெல்லிமீன்கள் தீண்டியதில் 4 சிறுவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை கடற்கரையில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிறிய அளவிலான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கியுள்ளன.
கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது இந்த ஜெல்லிமீன்களுடன் தொடர்பு ஏற்பட்டதால் தோலில் எரிச்சல் மற்றும் காயங்கள் ஏற்பட்டு 10 பேர் அவதிப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட அனைவரும் நலமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடற்கரையில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான ஜெல்லிமீன்கள் காணப்படுவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பாணந்துறை கடற்கரையில் கடலில் இறங்கிக் குளிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




