நீர்கொழும்பு சிறைக் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் நான்கு ஆண் கைதிகள் காயமடைந்துள்ளனர்குறித்த விபத்தில் காயமடைந்த கைதிகள் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (05) நீர்கொழும்பு சிறையில் இரு குழு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஆண் கைதிகள் குழு ஒன்று கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.