இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுப் பகுதியில் இன்று பிற்பகல் (15) 6.9 ரிக்டர் அளவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் அந்த நாட்டைத் தாக்கிய இரண்டாவது பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.
இந்த நிலநடுக்கத்தின் மையம் சுமாத்திராவின் மேடான் (Medan) நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 126 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள பெமடாங்சியந்தார் (Pematangsiantar) பகுதியில், பூமிக்கு அடியில் 183 கிலோமீற்றர் ஆழத்தில் கண்டறியப்பட்டுள்ளது.
அதிர்ஷ்டவசமாக, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
முன்னதாக, இன்று பதிவான 7.7 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கத்தில் குறைந்தது 38 பேர் உயிரிழந்திருந்த நிலையில், இந்த இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது



