கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் இலங்கை பயணி கைது!



வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டுவர முயன்ற விமானப் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

துபாயிலிருந்து இலங்கை வந்த 30 வயதுடைய மினுவாங்கொடை, திவுலபிட்டிய பகுதியைச் சேர்ந்த நபரே இன்று (08) கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தனது இரண்டு பயணப் பொதிகளில் சிகரெட்டுகளை மறைத்து கொண்டு வந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவற்றுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.