வருடாந்த கதிர்காம யாத்திரை

வருடாந்த கதிர்காம யாத்திரை

வருடாந்த கதிர்காம யாத்திரை இம்முறை பாதுகாப்பு காரணமாக உகந்தை வரை மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது பாதயாத்திரைக் குழு ஏற்பாட்டாளர் பற்றிக் கரிகன் அவரது பாதயாத்திரகளுக்கு இதுகுறித்து அறிவித்துள்ளார். அவரது அணியில் சுமார் 1500பாதயாத்திரிகள் பாதயாத்திரையில் ஈடுபடுவது வழக்கம் அத்துடன் கதிர்காம முருகன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 3ம்திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18ம் திகதி தீர்தோற்சவத்துடன் நிறைவடையும் உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 4ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 18ம் திகதி தீர்தோற்சவத்துடன் நிறைவடையும் வருடாந்த கதிர்காம பாதயாத்திரை வழமையாக உகந்தை வழியாக நடைபெறுவது வழக்கம் இம்முறை கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபடுவோரின் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுகிறது இம்முறை கதிர்காம பாதயாத்திரை பாதயாத்திரிகர்களின் பாதுகாப்புக்கு தாம் உத்தரவாதளிக்க முடியாதென அரசு கூறியுள்ளது இந்நிலையில் எதிர்வரும் 28ம் திகதி கதிரகாமம் செல்லும் யாத்திரிகர்கள் உகந்தை வழியாக காட்டிற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். என உகந்தமலை முருகன் ஆலய நிறுவாகம் அறிவித்துள்ளது.
கதிர்காம திருவிழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு பாத யாத்திரையில் ஈடுபடும் பக்தர்களின் நலன் கருதி எதிர்வரும் 27ம் திகதி முதல் யாலா வனாந்தரப் பாதை திறக்கப்படவுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பாத யாத்திரை மட்டக்களப்பில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. கடந்த காலங்களில் வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதிலும் தற்போது எந்வொரு வாகனத்திலும் பயணிக்க முடியாதென பாதுகாப்பு படையினர் தடையுத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், இராணுவப்படையினரைத் தவிர்ந்த வேறு எவரும் யாலா இலக்கம் இரண்டு வனாந்தரப் பகுதிக்குள் பிரவேசிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டுள்ளது.