துலாம் 2012 புத்தாண்டு ராசிபலன்

துலாம்

சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய.
உண்மை, நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்கும் துலா ராசி நேயர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் குரு உலவும் அற்புதமான நேரமிது. சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகியோரும் அனுகூலமாகவே உலவுகிறார்கள். யோக காரகன் சனி ஜன்ம ராசியில் உலவுவதும், குருவின் பார்வையைப் பெறுவதும் கூட சிறப்பாகும். இதனால் இப்புத்தாண்டு சிறப்பாக அமையும். வாழ்வில் முன்னேற நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பண வரவு அதிகமாகும். நண்பர்கள், கூட்டாளிகள், தனவந்தர்கள் ஆகியோரால் நலம் பெறுவீர்கள். அரசு உதவி கிடைக்கும்.


மனத்துணிவு கூடும். எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். புத்திசாலித்தனம் பளிச்சிடும். வசீகரச் சக்தி கூடும். புதிய வீடு, மனை, நிலம், வாகனம் ஆகியவற்றின் சேர்க்கை நிகழும். பழைய வீடு, மனைகளைப் புதுப்பித்துக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெறுவார்கள். இயந்திரம்,
எரிபொருள், மின்சாதனங்கள், வெடிப்பொருட்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதம் போன்ற கலைத்துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். புதிய ஒப்பந்தங்களும் கைக்கு வந்து சேரும். காண்ட் ராக்ட் முறையில் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

17-5-2012 முதல் குரு 8-ஆமிடம் மாறி, கேதுவுடன் கூடுவது சிறப்பாகாது. உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும், மன வருத்தம் ஏற்படும். மறைமுக உறுப்பில் நோய்நொடிகள் ஏற்படும். மூலம், ஜனனேந்திரியம் போன்ற உபாதைகள் உண்டாகும். ஆன்மிகவாதிகள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், தொழில் அதிபர்கள் ஆகியோர் தங்கள் பொறுப்புக்களைச் சரிவர ஆற்றி வருவது அவசியமாகும். ஜன்மச் சனிக்குக் குருவின் பார்வை ஆகஸ்ட் முதல் விலகுவதால் மதிப்பு குறையும். இந்தப் புத்தாண்டு முழுவதும் ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் சிறுசிறு தடைகளும், குறுக்கீடுகளும் அவ்வப்போது ஏற்படவே செய்யும். புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். வருடப் பின்பகுதியில் இளைய சகோதர, சகோதரிகளின் உடல்நலனில் கவனம் தேவைப்படும்.

தந்தையை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரலாம். அக்டோபர், நவம்பர் மாதங்களில் பொருளாதார நிலை ஓரளவுக்கு உயரும். புதிய சொத்துக்களும் சிலருக்கு சேரும். டிசம்பரில் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். அரசுப் பணிகள் ஈடேறும். முக்கியஸ்தர்கள் உதவி புரிவார்கள்.

சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். வருடப் பின்பகுதியில் அஷ்டம குருவுக்காக வியாழக்கிழமைகளில் குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 8.

திசை: வடக்கு, தென்கிழக்கு, மேற்கு.

தெய்வம்: மகாலட்சுமி.
--