நாளை முதல் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் பெறவும் புதுப்பிக்கவும் TIN சான்றிதழ் கட்டாயம்!


இலங்கை முழுவதும் நாளை (நவம்பர் 1) முதல் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கும் புதுப்பிப்பதற்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்க (TIN) சான்றிதழ் கட்டாயமாக்கப்படவுள்ளது.

இதற்கான சுற்றறிக்கை மேல் மாகாண மோட்டார் போக்குவரத்து ஆணையாளரால் வெளியிடப்பட்டுள்ளது.

TIN சான்றிதழின் அச்சுப் பிரதிகள் மற்றும் இலத்திரனியல் பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

18 வயதுக்குட்பட்டவர்கள் உள்ளிட்ட சில பிரிவினருக்கு இந்நடைமுறையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது.