அம்பாறை, மட்டக்களப்பில் கடும் மின்னல் தாக்க அபாயம் – அம்பர் எச்சரிக்கை !



அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று (27) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30க்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை நாளை (28) புதன்கிழமை இரவு 11.30 வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் கடும் மின்னல் தாக்கத்துடன், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எனவே, மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.