அரபிக்கடலில் இருந்து கிழக்கு நோக்கி நகர்ந்து வந்து காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது தமிழ்நாட்டின் நிலப்பரப்பைத் தாண்டி வங்காள விரிகுடாக் கடலுக்குள் நுழையத் தொடங்கியுள்ளது.
இது நாளை அதிகாலை தென்கிழக்கு திசை நோக்கி நகர்ந்து யாழ்ப்பாணம், முல்லைத்தீவுக் கடற்பகுதியூடாக திருகோணமலைக் கடற்கரையை அண்மித்து பின்னர் மீள வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 27.10.2026 ( செவ்வாய்க் கிழமை) இரவு ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெற்று தனித்த ஒரு நிகழ்வாக 'அர்னாப்' புயலைப் பின்தொடர்ந்து இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 'வஜ்ரபுக்கொட்டுரு' பிரதேசத்துக்கு அண்மித்துக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ( இதில் சில மாற்றங்கள் நிகழக் கூடும்- ஏனெனில் தற்போதைய மாதிரிகளின் வெளிப்பாடே இது) ஆரம்பத்தில் இந்த சுழற்சி அர்னாப் புயலுடன் இணையும் என எதிர்பார்க்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது வங்காள விரிகுடாவின் சூறாவளி/ தாழமுக்க வரலாற்றில் முற்றிலும் புதிய நிகழ்வு. ஒரு புயல் கரையைக் கடந்து சில மணி நேரங்களின் பின்னர் கிட்டத்தட்ட அதேபாதையில் இன்னுமொரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து சில நூற்றுக்கணக்கான கிலோமீற்றர் இடைவெளியில்( ஒரே மாநிலத்தில்- ஆந்திரப் பிரதேசம்) கரையைக் கணக்கின்ற வரலாற்று நிகழ்வாக இது அமையும்.
1999, ஒக்டோபர் மாதம்
இரண்டு தனித்த புயல்கள் ஒரே மாதத்தில் இந்தியாவின் ஒடிசாவைத் தாக்கின. முதலாவது புயல் ஒக்டோபர் 17 அன்று கோபால்பூர் அருகே கரையைக் கடந்தது; இரண்டாவது, பேரழிவை ஏற்படுத்திய சூப்பர் புயல், ஒக்டோபர் 29 அன்று பாரதீப் அருகே கரையைக் கடந்தது. இடைவெளி சுமார் 12 நாட்கள்.
2013 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட ஹெலன் (Helen) மற்றும் லெஹர் (Lehar) புயல்கள். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி இவை ஆந்திரக் கடற்கரைப் பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட புயல்களாகக் குறிப்பிடப்படுகின்றன.
மேலும், 1994 நவம்பரில் ஒரு புயலுக்குப் பிறகு மூன்று நாட்களில் வங்காள விரிகுடாவில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவானது. அது காரைக்கால் அருகே தமிழ்நாட்டைக் கடந்தாலும், தெற்கு ஆந்திராவிலும் மழை பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால் இரண்டுக்குமான இடைவெளி மூன்று நாட்கள்.
இந்தச் சுழற்சியின் நகர்வு காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில்.....
இன்று (26.10.2026) அனைத்துப் பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும். தொடர்ந்து மேகமூட்டமான வானிலையும் நிலவும். யாழ்ப்பாண மாவட்டத்தில் தீவகப் பகுதிகள் உட்பட நாளை (பகலும் இரவும் சேர்த்து) ஒரு சில இடங்களில் மிகக் கனமழைக்கும் வாய்ப்புண்டு. யாழ்.நகரம் மற்றும் மாவட்டத்தின் ஏனைய தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக் கூடும். இப்பகுதி மக்கள் நாளைய தினம் சற்று அவதானமாக இருப்பது அவசியம்.
கிளிநொச்சி மாவட்டத்தில்.....
இன்றோடு ஒப்பிடுகையில் இன்றைய தினம் (26.10.2026) கிளிநொச்சி அதிக அளவில் மழையைப் பெறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக காலை, முற்பகல், நண்பகல், பிற்பகல் என சிறிய இடைவெளிகளோடு கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில்........
முல்லைத்தீவு மாவட்டத்திலும் இன்றோடு ஒப்பிடுகையில் இன்றைய தினம் (26.10.2026) அதிக அளவில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக சுழற்சி முல்லைத்தீவை அண்மிக்கும் போது முல்லைத்தீவு மாவட்ட்த்தின் ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வவுனியா மாவட்டத்தில்......
இன்றைய தினம் (26.10.2026) வவுனியா மாவட்டம் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. நாளை காலை முதலே மழையைப் பெறும் வவுனியா மாவட்டம் முற்பகல், நண்பகல், பிற்பகலில் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. நாளை வவுனியா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மன்னார் மாவட்டத்தில்......
---------------------------------------------------------------------
மன்னார் மாவட்டத்தில் இன்று கிடைத்ததை விட அதிக மழை இன்றைய தினம் (26.10.2026) கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக நாளை மன்னார் தீவுப் பகுதி அதிக மழையைப் பெறும் . தீவினதும் பிரதான நிலப்பகுதியினதும் ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மன்னார் மாவட்டத்தில் நாளை(26.10.2026) காலை 7.30 மணியளவில் தொடங்கும் கனமழை பிற்பகல் வரை நீடிக்கும். சிலமணி நேரங்கள் மிகக் கனமழை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணம் முழுவதும் இன்று கனமழை கிடைக்கும். பல இடங்களில் செறிவான கனமழை சில மணி நேரங்கள் தொடரும்.
வடக்கு மாகாணத்தின் தாழ்நிலப் பகுதிகளில் நாளை சிறிய அளவிலான வெள்ள அனர்த்த நிகழ்வுகள் ஏற்படக்கூடும். ++++++
வடக்கு மாகாண மக்கள் எதிர்வரும் 27.10.2026 காலை 7.00 மணி வரை மிக அவதானமாக இருப்பது அவசியம்.
வடக்கு மாகாணம் இன்றைய தினம் விசேட அவதானிப்புக்குரியது.
திருகோணமலை மாவட்டத்தில்
திருகோணமலை மாவட்டத்திலும் இன்று கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று (26.10.2026) காலையும் பிற்பகலிலும் சில இடங்களில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில்
இன்று (26.10.2026) மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக காலை 9.30 மணியளவில் வாழைச்சேனையை அண்மித்த பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அம்பாறை மாவட்டத்தில்.....
இன்று (26.10.2026) அம்பாறை மாவட்டத்தில் காலை தூறல் அல்லது மழையற்ற நிலை காணப்படும். பிற்பகல் 1.00 மணியளவில் கனமழை கிடைக்க தொடங்கும். எனினும் கிழக்கு மாகாணத்தில் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடுகையில் அம்பாறையில் நாளைய தினம் மழை சற்று குறைவாகவே கிடைக்கும் வாய்ப்புள்ளது.
புத்தளம் மாவட்டத்தில்.......
புத்தளம் மாவட்டத்தில்இன்று இரவும் இன்றும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று பகல் முழுவதும் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. புத்தளம் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
புத்தளம் மாவட்டத்தின் தாழ்வான பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள நிகழ்வுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
புத்தளம் மாவட்டமும் நாளைய தினம் விசேட அவதானிப்புக்குரியது.
கொழும்பு மாவட்டத்தில்....
கொழும்பு மாவட்டத்தில் இன்றும் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தின் உளநிலப் பகுதிகளின் சில இடங்கள் மிகக் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
கம்பஹா மாவட்டத்தில்
இன்றைய தினம் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் தாழ்வான பகுதிகளில் நாளைய தினம் சிறிய அளவிலான வெள்ள நிகழ்வுகள் ஏற்படக் கூடும்.
இன்றைய தினம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களும் விசேட அவதானிப்புக்குரியவை.
களுத்துறை மாவட்டத்தில்....
களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் இன்று (26.10.2026) கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில்......
இன்றைய தினம் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் நாளை காலை தொடங்கும் கனமழை நண்பகல் தாண்டியும் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இன்றைய தினம் இரத்தினபுரி மாவட்டமும் விசேட அவதானிப்புக்குரியது.
நுவரெலியா மாவட்டத்தில்......
நுவரெலியா மாவட்டத்தில் இன்று பரவலாக மிதமானது முதல் சற்றுக் கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக ஹற்றனை, நுவரெலியாப் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கண்டி மாவட்டத்தில்.......
இன்றைய தினம் கண்டி மாவட்டத்தில் பரவலாக மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாலை அல்லது இரவில் கண்டி நகரத்தை அண்மித்த பகுதிகளில் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கேகாலை மாவட்டத்தில்
இன்றைய தினம் காலை கேகாலை மாவட்டத்தில் பரவலாக மிதமானது முதல் சற்றுக் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாலை 3.00 மணிக்கு பின்னர் கேகாலை மாவட்டம் முழுவதும் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக ஒரு சில இடங்களில் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
குருநாகல் மாவட்டத்தில்
குருநாகல் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் பரவலாக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிகக் கனமழை பதிவாகும் வாய்ப்புள்ளது.
காலி மாவட்டத்தில்........
காலி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் இன்று (26.10.2026) கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில்.....
அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் இன்று (26.10.2026) பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மிகக் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக அனுராதபுரம் தொடக்கம் தம்புள்ளை வரையான பகுதிகளில் மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பொலன்னறுவையில் பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
பதுளை மாவட்டத்தில்
பதுளை மாவட்டத்தில் பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. எனினும் பதுளை நகரத்தை அண்மித்த பகுதிகளில் சற்றுக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மாத்தறை, அம்பாந்தோட்டை, மொனராகலை மாவட்டங்கள்.....
இம்மாவட்டங்களிலும் பரவலாக மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கனமழை கிடைத்திருப்பதாலும் மேலும் 72 மணத்தியாலங்களுக்கு கனமழை கிடைக்கும் என்பதனாலும் மத்திய, சப்ரகமுவா, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் நிலச்சரிவு நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, பதுளை மாவட்ட மக்கள் இது தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
இக்காலத்தில் மழை கிடைக்கும் போது செறிவான இடிமின்னல் நிகழ்வுகளும் இடம்பெறும் வாய்ப்புள்ளன. எனவே மக்கள் இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியம்.
வடக்கு, கிழக்கு, வடமேற்கு, மேற்கு தென்கிழக்கு கடற்பகுதிகள் அரபிக்கடல் சுழற்சியின் நகர்வு மற்றும் அர்னாப் புயல் காரணமாக கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதைத் தவிர்ப்பது சிறந்தது. குறிப்பாக வடக்கு, கிழக்கு கடற்பகுதிகளுக்கு மீனவர்கள் எக்காரணம் கொண்டும் செல்லக் கூடாது.
அதேவேளை மத்திய வங்காள விரிகுடாவில் அர்னாப் புயல் உருவாகியுள்ளது. வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர மாநிலத்தில் எதிர்வரும் 28.10.2027 அன்று கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.jpg)