மிதுனம் -2012 சித்திரை புது வருட ராசி பலன்

மிதுனம்:மிருகசீரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய


உங்கள் ராசிக்கு 11-ல் குருவும் சூரியனும் இருப்பது விசேடமாகும். செவ்வாய், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். அரசாங்கத்தில் உயர் பொறுப்புக்கள் கிடைக்கும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை நிகழும். தந்தையாலும், மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் அனுகூலம் உண்டாகும். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும்; வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கலைத்துறையினருக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். பொருள் கொடுக்கல்-வாங்கல், ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் ஆகும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் கிட்டும்

. பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவற்றைப் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். மே 17 முதல் குரு 12-ஆமிடம் மாறுவதாலும் சனி பலம் குறைந்திருப்பதாலும் மக்கள் நலனில் கவனம் தேவை. டிசம்பர் 23 முதல் ராகு 5-ஆமிடத்துக்கு மாறுவது சிறப்பாகாது. கேது 11-ஆமிடம் மாறுவது விசேடமாகும். ராகுவும் சனியும் ஒன்று கூடி 5-ல் இருப்பதால் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வாயு உபத்திரவம் கொடுக்கும். கெட்ட எண்ணங்களுக்கும், பழக்க வழக்கங்களுக்கும் இடம் தரலாகாது. நேரான பாதையில் செல்வதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். மக்களின் நடத்தையில் கவனம் தேவைப்படும். மக்களால் மன அமைதி குறையும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. பரிகாரம்: கேது, சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து வருவது நல்லது. மகாவிஷ்ணுவையும், மகாலட்சுமியையும் வழிபடவும். டிசம்பர் 23 முதல் துர்கையை வழிபடவும்