சிம்மம் - 2012 சித்திரை புது வருட ராசி பலன்

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய.

 சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி, கேது ஆகிய முக்கியக் கிரகங்களின் சஞ்சாரம் இப்புத்தாண்டு ஆரம்பத்தில் சிறப்பாக இருப்பதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். பிறரால் போற்றப்படுவீர்கள்.
நிர்வாகத்திறமையால் சாதனை பல ஆற்றுவீர்கள். அறிவாற்றல் பளிச்சிடும். பொருளாதார நிலை உயரும். பேச்சாற்றலால் புகழ் கூடும். தெய்வப் பணிகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சாது தரிசனம், கிட்டும். ஜோதிடம், அறநிலையம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். மதாபிமானம் கூடும். முயற்சி வெற்றி பெறும். மனோபலம் கூடும். உடல்பலமும் அதிகரிக்கும். நோய்நொடிகள் விலகும். எதிரிகள் விலகிப் போவார்கள். மே 17 முதல் குரு 10-ஆமிடம் மாறுவதால் குடும்ப நலம் சிறக்கும். நிலபுலங்கள் சேரும். பிரச்னைகள் குறையும். பொருளாதார நிலை உயரும். தொழில் சம்பந்தப்பட்ட சில பிரச்னைகள் ஏற்படும். பக்குவமாக சமாளிப்பது நல்லது ஆகஸ்ட் 4 முதல் சனி 3-ஆமிடம் மாறி, நேர்கதியில் செல்வதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலாளர்களும் விவசாயிகளும் முன்னேற்றமான பாதையைக் காண்பார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். போட்டிப் பந்தயங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் பரிசுகளையும், பதக்கங்களையும் வெல்வார்கள். டிசம்பர் 23 முதல் ராகு 3-ஆமிடம் மாறுவதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் வலுப்பெறும். அயல்நாட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கூடிவரும். தாய் நலம் சீராகும். வீண் அலைச்சல் குறையும் பயணத்தால் அனுகூலம் உண்டாகும். 9-ஆமிடத்துக்கு கேது இடம் மாறுவதால் தந்தை நலனில் கவனம் தேவைப்படும் இளைய சகோதர, சகோதரிகளின் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். சொந்தமாகத் தொழில் புரிபவர்கள் பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. சிலருக்குத் தொழில் ரீதியாக விரும்பத்தகாத இடமாற்றம், நிலைமாற்றம் உண்டாகும். பிற மொழி, மதக்காரர்களால் நலம் ஏற்படும். பரிகாரம்: மே 17 முதல் குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடுவது நல்லது. டிசம்பர் வரை ராகுவின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் துர்கையை வழிபடவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும். ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும்.