கல்முனை மாநகரசபைக்கு உட்பட்ட சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை அத்துமீறி அபகரித்து கொண்டதாக கூறி நேற்று முன் தினம் மாநகர சபை உத்தரவுக்குமைய கட்டிடங்களும் சொத்துகளும் அகற்றப்பட்டுள்ளன. இதில் பல ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும், தென்னை மரங்களும் அகற்றப்பட்டுள்ளன. இது தொடர்பில் குறித்த உரிமையாளர் மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளதுடன், இதனை பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநருக்கும், முதலமைச்சருக்கும், உள்ளுராட்சி ஆணையாளரின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.
கல்முனை பிரதேசத்தில் எவ்வளவோ அத்து மீறிய கட்டிடங்களும், குடியிருப்புகளும் இருந்தும் தமிழர்கள் என்ற காரணத்துக்காகவும், வேறு சிலரின் தூண்டுதலினாலுமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்












