வெளிநாடு செல்ல இருந்த ஐந்து பெண்கள் செங்கலடி பிரதேச செயலகத்தால் தடுத்துநிறுத்தப்பட்டுள்ளனர்!


செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தினால் இந்தவருடம் வெளிநாடு செல்லயிருந்த 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை உடைய ஐந்து தாய்மார்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.


செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவில் வறுமை காரணமாக கைக்குழந்தைகளை உறவினர்களிடம் விட்டு விட்டு வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்களின் வீதம் அதிகரித்து வருகின்றது. இதனால் மிகப்பெரிய சமூகச் சீர்கேடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வருவதனால் வெளிநாடு செல்லும் பெண்களின் குடும்பங்களும், குழந்தைகளும், சிறுவர்களும் மிகமோசமான உடல்,உளப் பாதிப்புக்கு உள்ளாவதுடன் பிள்ளைகளின் கல்வி, பாதுகாப்பு போன்றன கேள்விக் குறியாகியுள்ளது.

இன் நிலையில் இந்த வருடத்தில் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் படி வெளிநாடு செல்லவிருந்த 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை உடைய  ஐந்து தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஊடாக விமான நிலையத்தில் வைத்து தடுத்துநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி தடுத்துநிறுத்தப்பட்ட களுவன்கேணி, ஐயன்கேணி, படுவான்கரை பிரதேசங்களைச் சேர்ந்த  பெண்களுக்கு அவர்களது பிரதேசத்திலேயே கைத்தொழில் செய்வதற்கான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. உ.உதயசிறிதர் அவர்கள் தெரிவித்தார்.

மேற்படி சம்பவமானது கைகுழந்தைகளை விட்டு விட்டு வெளிநாடு செல்லும் பெண்களுக்கும், அதனால் பாதிக்கப்படும் சமூகத்திற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் பொதுமக்கள்.

தொடர்வுபட்ட செய்தி
http://www.battinews.com/2013/03/blog-post_9356.html