திருப்பழுகாமத்தில் வருடாந்த விருதுவழங்கல் போட்டி

(பிரணி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் திருப்பழுகாமத்தில் அமைந்துள்ள  நாகா ஆங்கில அகடமி இன்ரநெசினல் அமைப்பானது தனது 2வது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2வது தடவையாகவும் வருடாந்த விருதுவழங்கல் போட்டி நிகழ்வினை நேற்று முன்தினம் ( 16.11.2013) மட்ஃதிருப்பழுகாமம் விபுலானந்த வித்தியாலயத்தில் மிகவும் சிற்ப்பான நடாத்தியது.
இந்த அகடமியின் முகாமைத்துவப் பணிப்பாளர்(ஆனு)  சாமஸ்ரீ தேசமானிய, தேசபந்து நாகரெத்தினம் சிவதர்சன் அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இவ் அகடமியின் ஒருங்கிணைப்பாளர் க.புவியந்திரன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப் போட்டியானது வழமைபோல் அக்கடமியில் கல்வி பயிலும் சிறார்களிடையே சிறந்தபாடகர், சிறந்தவாசிப்பாளர், சிறந்தஎழுத்தாளர், எனும் 3 பிரிவுகளில் முழுமையாக ஆங்கிலத்தில் நடைபெற்றது.
இதில் இவ் அகடமியைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றினர். இப் போட்டியில் ஆங்கில ஆசிரியர்களான ம.சுரேஸ், ஜி.உதயதராஜ், ஆ.திருக்கணேசன், சு.வினோதரன் ஆகியோர் நடுவர்களாக கலந்து சிறப்பித்தனர்.
இப்போட்டியின் இறுதியில் சிறந்தபாடகருக்கான விருதினை அருட்சிவம் வக்சன் அவர்களும், சிறந்தவாசிப்பாளருக்கான விருதினை போசிகா சத்தியன் அவர்களும், சிறந்த எழுத்தாளருக்கான விருதினை விதுர்க்கா ஜினிபிரபாகரன் அவர்களும்; தெரிவு செய்யப்பட்டனர்.
செய்யப்பட்டவர்களுக்கான விருதுவழங்கல் விழாவானது எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ளதாக அகடமியின் முகாமைத்துவப் பணிப்பாளர்(ஆனு)  நாகரெத்தினம் சிவதர்சன் தெரிவித்தார்.