கஷ்டத்தின் மத்தியில் சாதனை புரிந்து மருத்துவ பீடத்துக்கு தெரிவான மாணவி - இது தான் சாதனை !

(தஜி )இன்று வெளியாகிய க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் படி விஞ்ஞான பிரிவில் பேத்தாழை பிரதேசத்தில் இருந்து பற்குணராஜா தயானி 1 A ,2B சித்திகளை பெற்று மாவட்ட மட்டத்தில் 21 ஆவது நிலையினை பெற்று மருத்துவ துறைக்கு தெரிவாகி உள்ளார் . மட்டக்களப்பு வின்சென்ட் தேசிய பாடசாலையில் உயர்தரம் பயின்று பரீட்சைக்கு தோற் றி இருந்தார் . இவர் ஆரம்பம் முதல் க .பொ சாதாரணம் வரை பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்றார் சாதாரண தர பரீட்சையில் 8 A ,1C பெற்று பேத்தாளை விபுலானந்தா வித்தியாலயத்தில் முதலிடத்தை பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது . பரீட்சையில் சித்தி தொடர்பாக கருத்து தெரிவித்த மாணவி மிகுந்த குடும்ப கஷ்டத்தின் மத்தியில் கல்வியை தொடர்ந்ததாகவும் ஆரம்பம் முதல் தனது பெற்றோர் தன்னை வைத்தியராக வேண்டும் என ஆசை பட்டதாகவும் , வறிய நிலையிலும் தன்னை கற்பித்ததாகவும் இந்த நிலைக்கு வர உதவிய பெற்றோர் ,உறவினர்கள் ,ஆசிரியர்கள்  அனைவருக்கும்  நன்றி தெரிவித்தார்.

எமது Battinews.com இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்கள் 

( மறக்காமல் உங்களது வாழ்த்துக்களை Comment  ல் தெரிவியுங்கள் & Please share in your facebook   )