அம்பாரை மாவட்டம் தமிழ் மக்களின் பாரம்பரிய மண் என்பதை மற்ற சமூகங்கள் மறந்துவிடக்க கூடாது

(அபிவரன்);
 அம்பாரை மாவட்டத்தில் மூவின மக்கள் தற்போது வாழ்ந்து வந்தாலும் கடந்த பல வருடங்களுக்கு முன்னால் இது தமிழர்களின் பாரம்பரியம் மிக்க மண் என்பதை மற்ற சமூகங்கள் மறந்துவிடக்க கூடாது என்பதுடன் கடந்தகால யுத்த சூழ்நிலைகளை மையமாக வைத்து தமிழர்களின் தாயகப் பூமியான இம் மாவட்டத்தில் உள்ள தமிழர்களுக்கு உரித்தான வளங்கள் அனைத்தையும் மற்ற இனங்களால் அபகரிக்கப்பட்டு வந்துள்ளது எனவே எஞ்சியிருக்கும் வளங்களையும் உரிமைகளையும் விட்டுக்கொடுப்பதற்கு அம்பாரை மாவட்ட தமிழர்வாழ் உரிமைகள் ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது என அதன் தலைவர் எஸ். சசிக்குமார் தெரிவித்தார்
திருக்கோவில் பிரதேசத்தில் மக்கள் பிரதிநிதகளை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட தமிழர்வாழ் உரிமைகள்  ஒன்றியத்தின் தலைவர் எஸ். சசிக்குமார் பேசுகையிலே இவ்வாறு தெரிவித்தார்
அவர் தொடர்ந்துபேசுகையில்
தற்போது இன ஒற்றுமை என்று கூறிக்கொண்டு தமிழர்களின் உரிமைகளில் ஒன்றாக இருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் உரிமைகள் அனைத்தையும் மறுக்கின்ற சமூகமாக சகோதர முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகள் முன்நிற்கின்ற செயற்பாடானது இம் மாவட்டத்தில் தமிழர்களை மீண்டும் மீண்டும் நசுக்குகின்ற செயற்பாட்டையே சுட்டிக்காட்டுகின்றது.
இன்று இன நல்லுறவு இன ஒற்றுமை என்று பத்திரிகைகளில் ஒப்பாரி வைக்கின்ற முஸ்லீம் அரசியல் தலைமைகளிடம் கேட்கின்றேன் கடந்த 23 வருடங்களாக உப பிரதேச செயலகமாக தமிழ்மக்களின் பிரதேசத்தில் இருந்து வருகின்ற தமிழ்மக்களுக்கே உரித்தான ஒரு பிரதேச செயலகத்தினை தரமுயர்த முட்டுக்கட்டையாக இருந்துகொண்டு இருந்துகொண்டு செயற்படுவதுதான் உங்கள் இன ஒற்றுமையின் வெளிப்பாடா ?
கடந்த 1989 ம் ஆண்டு அரச வர்த்தமானியில் 28 உப பிரதேச செயலகங்கள் அறிவிக்கப்பட்டன இதில் கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் ஒன்று ஆனால் நடந்தது என்ன அறிவிக்கப்பட்ட அனைத்து உப பிரதேச செயலகங்களிலும் கல்முனை வடக்கு மட்டும் உப பிரதேசசெயலகமாக இருக்கின்றது ஏனைய 27 பிரதேச செயலகங்களும் தரமுயர்த்தப்பட்டு முழுமையான அதிகாரத்துடன் செயற்படுகின்றன இவை அனைத்துக்கும் முழுக்காரணமாக கடந்த கால யுத்த சூழலை சாதகமாக பயன்படுத்தி தமிழர்களின் உரிமையையும் வளங்களையும் சுரண்டிய அரசியல் தலைமைகளுக்கே என்பது தெட்டத் தெளிவான உண்மை .னி வருங்காலங்களில் இம் மாவட்ட தமிழ் மக்களின் நலன்கருதி புத்திஜீவிகளும் சிவில் அமைப்புக்களும் வர்த்தகர்களும் மதகுருமார்களும் ஒன்றுபட்டு உருவாகியுள்ள எங்கள் அமைப்பு மூலம் இனியும் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை என்பதை தெட்டத் தெளிவாகச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம்
எங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றமையை ஜனாதிபதிக்கும் பெரும்பான்மை அமைச்சர்களுக்கும் உடனடியாக தெரியப்படுத்தி அதற்கான எதிர்ப்பையும் தீர்வுகளையும் பெற்று வருகின்ற இவ்வேளையில் எங்களது சமூகம் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளும் ஜனாதிபதியிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக ஜனாதிபதி நல்ல தீர்ப்பை எடுப்பார் என்பதிலும் இது எம்மக்களுக்கு கிடைக்கப்போகின்ற உரிமைகளில் ஒன்று என்பதையும் சுட்டிக்காட்டி இனி வருங்காலங்களில் எமது சமூகம் ஏமாந்து போவதற்கு தயார் இல்லை என்பதுடன் தமிழர்களன் பிரதேசங்களில் முஸ்லிம் அரசியல் தலைகைளினால் திட்டமிட்டு நிலஅபகரிப்பு நடைபெறுகின்றது போன்றவற்றை ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களிடம் சுட்டிக்காட்டி அபகரிப்புக்கு எதிராக உயர்மட்ட நடவடிக்கையையும் மேற்கொண்டுவருகின்றோம். ஏன்றார்.   ;