தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளும் வசதி தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, fuelpass.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று, 'Vehicle Registration' பகுதியின் ஊடாகத் தேவையான தகவல்களை உள்ளீடு செய்து புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியும்.
ஏற்கனவே QR குறியீட்டைப் பெற்றிருந்த மற்றும் தற்போதும் அதே வாகனம் மற்றும் தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் நபர்களுக்குத் தமது குறியீட்டைப் புதுப்பிப்பதில் சிக்கல்கள் இருக்கவில்லை. எனினும், புதிய வாகன உரிமையாளர்கள் எதிர்கொண்ட தொழில்நுட்பச் சிக்கல்கள் தற்போது சரிசெய்யப்பட்டுள்ளன.
அத்துடன், அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் இன்று (15) பிற்பகல் அறிவிக்கப்படவுள்ளன.












.jpeg)
.webp)