கிழக்குப் பல்கலைக் கழகத்தில் 555 செலவில் நிருமானிக்கப்பட்ட கட்டிடத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்துவைப்பு


கிழக்குப் பல்கலைக் கழகத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வந்தாறுமூலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 555 மில்லியன் ரூபாய் பல்வேறு கட்டிடத் தொகுதிகளைத் திறந்து வைத்தார்

இந்த அபிவிருத்தித் திட்டங்களில், 230 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட வர்த்தக முகாமைத்துவ பீட கட்டிடத் தொகுதி, 171 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பிரதான நூலக கட்டிடத் தொகுதி, 121 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கலை கலாசார பீட கட்டிடத் தொகுதி,  7 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய நுழைவாயில் என்பனவற்றை ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணண் கோபிந்தராஜா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வுகளில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மற்றும் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஷீர் சேகுதாவூத், மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் வி. முரளிதரன், பொருளாதார அபிவிருத்திப்  பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாகாண சபை ஆளுநர் அட்மிரல் மொஹான் விஜய விக்ரம, முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜித் மற்றும் உறுப்பினர்கள்,  மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவி பேராசிரியை திருமதி சானிகா ஹிரும்புரேகம மற்றும் அமைச்சின் அதிகாரிகளும், கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதிகள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்னர்,