அக்கரைப்பற்று பொலிஸார் ஏற்பாடு செய்த புத்தாண்டு விளையாட்டு விழா

.(ஏ.ஜி.ஏ.கபூர்,அக்கரைப்பற்று)
தமிழ் சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்தபுத்தாண்டு விளையாட்டு விழா  பொலிஸ் மைதானத்தில் அண்மையில் நடைபெற்றது.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.சி.டி.இலங்கக்கோன் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் அதிதிகளாக அக்கரைப்பற்று, கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்களான யூ.எல்.ஹாஜா மொஹிதீன். காமினி தென்னக்கோன் மற்றும் தென் கிழக்குப் பல்கலைக்கழக பொலிஸ் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி எம்.எல்.றபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வையும், ஐக்கயத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விளையாட்டு விழாவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகளான யானைக்கு கண் வைத்தல், போத்தலில் தண்ணீர் நிரப்புதல், பலூன் ஊதுதல், டொபிகளை எறிந்து சிறுவர்களை சேகரிக்க வைத்தல், சங்கீதக் கதிரை உள்ளிட்ட விளையாட்டுக்கள் சிறுவர்கள் வயது அடிப்படையில் இடம்பெற்றதோடு. போலிஸ் உத்தியோகத்தர்கள் குழுக்களுக்கிடையிலான மென்பந்து கிறிக்கற் போட்டியும் இடம்பெற்றன.

ஐந்து ஓவர் கொண்ட கிறிக்கற் போட்டியில் நில நிற பி குழுவினர் ஒன்பது விக்கட்களினால் சிவப்பு நிற ஏ குழுவினரை வெற்றி கொண்டனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக லெத்தீப் நிஸாம்தீன் தெரிவு செய்யப்பட்டார்.

இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.