தமிழர்களை நசுக்கி அடக்கி வந்தமையினாலேயே இன்று தமிழர்களின் உரிமைப்பிரச்சினை சர்வதேசத்தின் பார்வைக்குத்திரும்பியிருக்கிறது

(நடனம்)
இந்த நாட்டினை மாறி மாறி ஆட்சிசெய்து வந்த  அரசாங்கம் தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தினை வழங்காது தமிழர்களை  நசுக்கி அடக்கி வந்தமையினாலேயே இன்று தமிழர்களின் உரிமைப்பிரச்சினை சர்வதேசத்தின் பார்வைக்குத்திரும்பியிருக்கிறது இனியாவது சர்வதேசத்தின் உதவிமூலம் தமிழர்களுக்கான உரிமை கிடைக்கப் பெறும் என எதிர் பார்க்கின்றோம் என கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்

சித்திரைப்புத்தாண்டினை முன்னிட்டு பதினைந்தாம் கிராமம் சுதந்திரன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு விழா   15ம் கிராமத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசிகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்

கலையரசன் தொடர்ந்து பேசுகையில் தமிழர்கள் இந்த நாட்டிலே பேரினவாத அரசாங்கத்தினால் அன்றில் இருந்து இன்று வரையும் ஏமாற்றப்பட்டே வருகின்றோம்.குறிப்பாக 1956 ம் ஆண்டு தனிச்சிங்கலச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது 1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழர் பேரவையிலன் போது தமிழர்கள் கொல்லப்பட்டனர் 1983 ம் ஆண்டு வெலிக்கடைச் சிறைச்சாலையில் 53 தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர் அன்றில் இருந்து 2009 வரைக்கும் தமிழர்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு இன்று இந்த நாட்டில் தமிழர்களின் விகிதாசாரம் குறைக்கப்பட்டு இருக்கின்றது இந்நிலையில்தான் தமிழர்களின் உரிமைப்பிரச்சனை சர்வதேசத்தின் பக்கம் திரும்பியிருக்கின்றது இத்தருணத்தில் தமிழர்களாகிய நாங்கள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிபை பலப்படுத்தி ஜனநாயக உரிமையினைப் வென்றெடுக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றோம் ஆகையால் ஒன்றுபட்டு செயற்பட வேண்டு.
நாங்கள் அபிவிருத்திக்குத் தடையானவர்கள்அல்ல அபிவிருத்திக்கு முன்னர் நாங்கள் சுதந்திரமாகவும் கௌரவமாகவும் இந்த நாட்டிலே வாழ எமக்கான உரிமையினைப் பெறவேண்டும் அதற்காகத்தான் ஜனநாயக வழியில் போராட்டங்களை நடாத்தி விருகின்றோம் என்னைப் பொறுத்தமட்டில் தமிழர்களுக்கு அநிதி ஏற்படும் போது என்னால் வெறுமனே பார்த்திருக்கமுடியாது தமிழ் மக்களுக்காக எதையும் கொடுக்கத் தயாராகவே உள்ளேன்
இன்று நாவிதன் வெளிப் பிரதேசத்தில் 8500ஏக்கர் நெல் காணிகள் நீர் இல்லாமல் செய்கைபண்ணப்படாது தரிசாகவே கிடக்கும் நிலை ஏற்றட்டு இருக்கிறது இதற்கு பலகாரணங்கள் சொல்லப்படுகிறது அதில் ஒன்று குளத்தில் நீர் இல்லை என்று ஆனால் நாவிதன் வெளிப்பிரதேசத்திற்கு குறிப்பிட்ட ஒரு சில ஏக்கர் செய்கை பண்ண உதவி இருக்க வேண்டும் அது இங்கு நடைபெறவில்லை. இது ஒரு அரசியல் அழுத்தமாகம் கருதவேண்டியும் உள்ளது
அம்பாரை மாவட்டத்தில்தமிழர்களும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்ற சமூகமாகவே இருக்கின்றோம்.இம் மத்தியில்தான் தமிழ்க் கூட்டமைப்ப அரசியல் செய்து வருகிறது.இதற்கெல்லாம் பக்க பலமாக இளைஞர்களே இருக்கின்றனர்
குறிப்பாக விளையாட்டு வழாவினை நடாத்திய சுதந்திரன் விளையாட்டுக்கழகமானது விளையாட்டில் மாத்திரமன்றி கல்வியில் பிரதேச மாணவக்களை முன்னேற்ற உறுதுணையாக செயற்;பட்டுவருகின்றமையினை பாராட்டுகின்றேன் இவ்விளையாட்டுக்கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் சிறந்த தலைமைத்துவமுடைய இளைஞர்களை உருவாக்கிச் சென்றமையினாலேயே பல தலைவர்கள் இருக்கின்றார்கள் இவ்வாறு மூத்த தலைவர்கள் இளம் தலைமுறையினர்களை சிறந்த தலைவர்களாக உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்.
இன்று அரச கட்சியில் இருக்கும் சிலர் தமிழ் மக்களையும் எமது இளைஞர்களையும் பிரித்தள முற்படுகின்றனர் இதனை எமது மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்