பாண்டிருப்பில் இன்று வேட்டைத்திருவிழா நாளை முத்துச்சப்பரபவனி !

கல்முனை பாண்டிருப்பு ஸ்ரீ சித்திவிநாயகர் மற்றும் ஸ்ரீ அரசடி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த சங்காபிசேகப்பெருவிழா   09ம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
இவ்வாலயத்தின் மஹோற்சவப் பெருவிழா கடந்த 5ம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இம் மஹோற்சவம் தொடர்ந்து 09 தினங்கள் திருவிழாக்கள் இடம்பெற்று பத்தாம் நாள் 14ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையும்.
காரைதீவு சிவாகம வித்யாபூசணம் சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் தலைமையில் நடைபெறும் இம் மகோற்சவபெருவிழாவிற்கு பிரதமகுருவாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஸ்ணு புஜாதுரந்தரர் சிவஸ்ரீ குமார சேவற்கொடியோன் குருக்கள்  செயற்படுகிறார்கள்.

கடநத  05ம் திகதி கொடிச்சீலை பாண்டிருப்பு ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் ஆலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டு 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இப்பெருவிழாவின்போது நேற்று 09ம் திகதி வெள்ளிக்கிழமை மஹா  சங்காபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.
இன்று 12ம் திகதி திங்கட்கிழமை பி.ப.4மணி முதல் சுவாமி ஆலயத்திலிருந்து புறப்பட்டு ஸ்ரீ வடபத்திரகாளியம்பாள் ஆலய முன்றலில் வேட்டைத்திருவிழா நடைபெறும்.
நாளை 13ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6மணிக்கு முத்துச் சப்பரபவனி இடம்பெறும்.

பத்தாம்நாள் 14ம் திகதி புதன்கிழமை காலை தீர்த்தோற்சவம் இடம்பெறும். மறுநாள் வைரவர் பூசையுடன் மஹோற்சவம் நிறைவுபெறும்.