கோட்டக்கல்வி அதிகாரி அவர்களால் பழுகாமத்திற்கு ஒன்றுகூடல் மண்டபம் அமைத்துத் தருமாறு கோரிக்கை



(பழுவூரான்)

அண்மையில் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற தொழிநுட்ப பிரிவு ஆரம்ப விழாவிலே  போரதீவுப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.பூ.பாலச்சந்திரன் அவர்கள் பழுகாமம் கண்டுமணி மகா
வித்தியாலயம் 67 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் உருவான பாடசாலை இன்றும் எதுவித மாற்றங்களுமின்றி கட்டடங்கள் ரீதியாக அதே நிலையிலேயே இருக்கின்றது. நான் அறிந்த வரையில் இந்த ஒரு மண்டபந்தான் இந்தப் பாடசாலையில் முதன்முதலாகக் கட்டப்பட்ட மண்டபம் என்பதை நான் அறிகின்றேன். இன்னும் காலவதியான கட்டடத்தில் நாம் நமது நிகழ்வுகளை நடாத்திக் கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்தார் தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,



போரதீவப்பற்றுப் பிரதேசமானது மிகப்பெரிய பரப்பளவைக் அகாண்ட பிரதேசமட்டுமல்லாது, கல்வியால் மிக எழுச்சி பெற்றது. அடுத்த ஆண்டு பயன்பெற வேண்டுமானால் பயிர் வளருங்கள், அடுத்த பத்து ஆண்டுகளில் பயன் பெற வேண்டுமானால் மரம் நடுங்கள், அடுத்த நூறு ஆண்டுகளில் பயன்பெற வேண்டுமானால் கல்வியைத்திட்டமிடுங்கள். இன்று
எதிர்காலத்திற்குத் தேவையான குறிப்புகளை மட்டும் படித்து சுமார் மூன்றரை இலட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானார்கள். அதில் 25000 மாணவர்கள் பல்கலைக்கழகக் படிக்கட்டுகள் திறந்து விடப்பட்ட வேளையில் அதிலும் 35 வீதமான மாணவர்கள் கலைத்துறையைத் தெரிவு செய்து தொழில் வாய்ப்பு இல்லாமல் 45
வயதுகளைத் தாண்டியும் தான் பெற்ற கல்விக்கு பெறுமதியை உணராமல் கடந்து சென்ற காலத்தில் அந்த நிலை ஏற்படக் கூடாதென்பதற்காகக் ஏறக்குறைய 1000 இடைநிலைப்பாடசாலைகளில் அபிவிருத்திக்காகப் 200 பாடசாலைகள் தொழிநுட்பபாடத்தை ஆரம்பித்து அந்த மாணவர்களுக்கு 9யு பெற்ற மாணவர்கள்தான் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அல்ல
மாறாக சாதாரண பரீட்சையிலே சாதாரண சித்தி பெற்றவர்களும் தங்கள் திறன் காரணமாக Nஏஞ மட்டம் 03 பெற்று பட்டங்கள் பெற்று பட்டதாரிகளாக, பேராசிரியர்களாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கு இது ஒரு
சந்தர்ப்பமாக இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தை இந்தப் பாடசாலையில் இந்த பிரதேசத்தில் உள்ள அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள  வேண்டியதுடன் கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களை உங்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கௌரவ விநாயகமூர்த்தி முரளிதரன் அவர்களே! 67 வருடங்களுக்கு முற்பட்ட காலத்தில் உருவான பாடசாலை இன்றும் எதுவித மாற்றங்களுமின்றி கட்டடங்கள் ரீதியாக அதே நிலையிலேயே இருக்கின்றது. நான் அறிந்த வரையில் இந்த ஒரு மண்டபந்தான் இந்தப் பாடசாலையில் முதன்முதலாகக் கட்டப்பட்ட மண்டபம் என்பதை நான் அறிகின்றேன். இன்னும் காலவதியான
கட்டடத்தில் நாம் நமது நிகழ்வுகளை நடாத்திக் கொண்டிருக்கின்றோம். 1000 பாடசலைத்திட்டத்தில் அதாவது 200 தொழிநுட்பபிரிவு பாடசாலையில ஒன்றுகூடல் மண்டபம் அல்லாத ஒரே பாடசாலை இந்தப் பாடசாலையாகத்தான் இருக்கும் என்பதைநான் அறிகின்றேன். இந்த மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பி வைக்கின்ற நாளில் இந்த மாணவர்கள் முறையான பயிற்சிகளைப் பெற்று தொழிநுட்பத் துறைக்காக பல்கலைக்கழகத்திற்கு செல்லுகின்ற நாளில்  நீங்கள் அமைத்துத்
தருகின்ற அந்த ஒன்றுகூடல் மண்டபத்திலிருந்து அந்த மாணவர்களை வழிஅனுப்பி வைப்பதற்கு உங்களால் இயன்ற அனைத்து
நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டுமென்ற மிகவும் அன்பாகவும் பணிவாகவும் இவ்விடத்தில் கேட்டுக் கொள்கின்றேன்.



எமது பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள கணணி நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் இல்லாமல் இருக்கின்றமையையும், எமது சகோதர கோட்டக்கல்வி அலுவலகம் இன்றும் பொலிசாரின் விடுதியாகப் பயன்படுத்தப்படுகின்றமையையும்,2014ம் ஆண்டு துறைநீலாவணை மகா வித்தியாலயத்திற்கு இந்த தொழிநுட்ப பாடத்துறையினை பெற்றுத் தருவதற்கு பூரணஅனுமதியினைப் பெற்று தர வேண்டும் என்பதையும் தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.