நீர்ப்பாசனத்தின் ஊடாக விவசாயத்தில் தன்னிறைவு காணும் கிழக்கிலங்கை


( தவா ) கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களமானது கிழக்கு மாகாண நீர்ப்பாசன. வீதி அபிவிருத்தி, வீடமைப்பு. கிராமிய மின்வழங்கல். நீர்வழங்கல் அமைச்சின் கீழ் செயற்படுகின்றது. இத் திணைக்களமானது மட்டக்களப்பில் தலைமைப் பணிமனையையும். அம்பாறை திருகோணமலை. மட்டக்களப்பு.
மாவட்டங்களில் பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனைகளையும். தம்பிலுவில் அம்பாறை. பட்டிருப்பு. செங்கலடி. திருகோணமலை ஆகிய 5 நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவுகளுடன் பொத்துவில் , மூதூர், குச்சவெளி ஆகிய மூன்று உப பிரிவுகளையும் உள்ளடக்கியதாகும்.


கிழக்கு மாகாணத்தில் இத்திணைக்களத்தின் பராமரிப்பில் 41 குளங்கள் உள்ளன. இவைகளில் திருகோணமலை  மாவட்டத்தில் 18 நடுத்தர குளங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 03 பெரிய குளங்களும் 10 நடுத்தர
குளங்களும் அம்பாறை மாவட்டத்தில் 04 பெரிய குளங்களும் 06 நடுத்தர குளங்களும் இத்திணைக்களத்தின் கீழ் பராமரிக்கப்படுவதனால் 33,000 ஏக்கர் விவசாயக்காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்கப்படுவதன் மூலமாக
23,000 விவசாயக்குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுகின்றன.

மூன்று தசாப்தகால யுத்த சூழல் மற்றும் பாரிய வெள்ள அனர்த்தங்கள் கிழக்குமாகாண நீர்ப்பாசனத்திணைக்களத்திற்கு சொந்தமான குளங்கள் ,அணைக்கட்டுக்கள் மற்றும் நீர்ப்பாசனக் கால்வாய்களையும் பெரும் சேதத்திற்கு உட்படுத்தியதுடன் அவற்றை புனருத்தாரணம் செய்யும்
சூழலையும் இல்லாதொழித்த வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கிழக்கு மாகாணத்தில் நீர்ப்பாசனத்துறை கிழக்கு மாகாணத்தில் மீள் எழுச்சி காண்பதற்காக சுமார் 2000 மில்லின் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எருமைத்தீவு ,பன்குடாவெளி,அம்பிளாந்துறை மற்றும் மகிழூர் பிரதேசங்களில் உள்ள விவசாய நிலங்களினுள் உவர் நீர் உட்புகுவதனால்; அவ்விவசாய நிலங்கள் பாதிப்படைந்தமையினால் அதனைத்தடுப்பதற்காக உவர் நீர் தடுப்பணைகள்; சுமார் 50 மில்லியன் ரூபா
செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில், முறையே கிரான் மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள மியான்கல் குளம் மற்றும் ஆனைசுட்டகட்டு குளம் என்பன நூற்று முற்பத்து மூன்று மில்லியன் ரூபா செலவில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில்
புனரமைக்கப்படுகின்றன.
இப்புனரமைப்பு வேலைகள் கடந்த 2011ம் ஆண்டு யூலை மாதம் 29ம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் மாகாண நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களின் பங்குபற்றுதலுடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  பசில் ராஜபக்ஸ அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு வேலைகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இப்பணி முடிவடைந்ததும் சுமார் இரண்டாயிரத்து ஐந்நூறு ஏக்கர் காணி நெற்செய்கைக்கு புதிதாக
உட்படுத்தப்படுவதுடன் மேலும் 2000 ஏக்கரில் பிற பயிர்ச்செய்கைகளும் செய்ய வாய்ப்பேற்பட உள்ளதால்
கடந்த கால வன்செயல்களினால் பெரிதும் பாதிக்கப்பட்டு வாழும் கிரான் மற்றும் ஓட்டமாவடி பிரதேச 1050 விவசாய குடும்பங்கள் நேரடியாக பெரிதும் நன்மை அடைவர் என எதிர்பார்க்கப்படுகின்றன.


மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில், அமைந்துள்ள புளுகுநாவிக் குளம் 432 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் புளுகுநாவிக் குளத்தின் குளக்கட்டு ஐந்து அடியினால் உயர்த்தப்பட்டு அதன் நான்கு வான் கதவுகளும் திருத்தப்பட்டு உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குளத்தின் கொள்ளளவு 3000 ஏக்கர் அடியினால் அதிகரிக்கப்பட்டதனால் சுமார் 750 ஏக்கர் காணிகள் புதிய நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றுள்ளதுடன் இப் புனரமைப்புத் திட்டத்தில், இந் நீர்ப்பாசனத் திட்டத்துடன் இணைந்திருந்து பின்னர்; கைவிடப்பட்டிருந்த கங்காணியார் குளமும் புனரமைப்பிற்காக
உள்வாங்கப்பட்டது. இப் புதிய குளத்தின் கொள்ளளவு 1600 ஏக்கர் அடியாகும். இக் குளத்திற்கு நான்கு புதிய வான்கதவுகள் பொருத்தப்பட்டு 400 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காணிகளுக்கு புதிதாக நீர்ப்பாசன வசதிகள் வழங்கப்படுவதனால் இவ்விரு திட்டத்தின் புனரமைப்பினால் 1600 விவசாயக் குடும்பங்கள் நன்மையடைவர்  மேற்படி புளுகுநாவி நீர்ப்பாசனத் திட்டமானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்  பசில் ராஜபக்ஷ அவர்களினாலும், கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் கௌரவ.சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மற்றும் கிழக்குமாகாண வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை அவர்களினாலும் யூலை மாதம் 29ம் திகதி 2011ம் ஆண்டு மக்களின் பாவனைக்காக வைபவரீதியாக திறந்துவைக்கப்பபட்டது.

கடந்த 2010 ம் ஆண்டு மார்கழி மற்றும் 2011ம் ஆண்டு தை மாதங்களில் பொழிந்த கடும் மழையின் விளைவாக ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தத்தினால் கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான குளங்கள், வாய்க்கால்கள் சிதைவடைந்தும்,உடைப்பெடுத்தும் காணப்பட்டதுடன்; விவசாய அணுகு பாதைகளும் அழிவடைந்திருந்தன. இவற்றை மீள் கட்டுமானம் செய்வதற்கு பெருமளவு நிதி ஒதுக்கீடு தேவைப்பட்டது. இச் சந்தர்ப்பத்தில்  நீர்ப்பாசன, வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை அவர்களின் முயற்சியின் காரணமாக அவற்றை; மீள்கட்டுமானம் செய்வதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு
நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு புனரமைப்பு செய்வதாக உறுதி அளித்தமை நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு கிடைத்த ஒரு பாரிய வரப்பிரசாதமாகும்.
இதனடிப்படையில் அம்பாறை மாவட்டத்தின் கீழ் மொத்தம் 117 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன் விளைவாக சுமார் 5,000 ஏக்கர் விவசாயக் காணிகள்  நீர்ப்பாசன வசதிகளைப் பெற்றுள்ளதுடன் 1550 விவசாயக் குடும்பங்களும் நன்மை பெற்றுள்ளன.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் தம்பிலுவில் பிரிவிலுள்ள சாகாமம் குளத்தின் குளக்கட்டு அகலமாக்கலும்  உறுதிப்படுத்தலும் வேலைக்காக 19 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டன. இக்குளத்தைப் பயன்படுத்தி சுமார் 3,370 ஏக்கர் விவசாயக் காணிகளின்  நீர்ப்பாசன வசதிகள் உறுதிசெய்யப்பட்டதுடன் 525 விவசாயக் குடும்பங்களும் நன்மைபெறுகின்றன.

அத்துடன் பயங்கரவாதத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தம்பிலுவில் பிரிவில் உள்ள றூபஸ் குள நீர்ப்பாசனத் திட்டத்துக்கு 25 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக சுமார் 4,500 ஏக்கர் விவசாயக் காணிகள் நீர்ப்பாசன வசதிகளைப்
பெறுவதுடன் 1,860 விவசாயக் குடும்பங்களும் நன்மையடைந்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பாராமரிப்பின் கீழ் உள்ள கல்லோயா நீர்ப்பாசனத் திட்ட அபிவிருத்தியைத் தொடர்ந்து அம்மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களுக்கு முறையான வடிச்சல் திட்டம் செயற்படுத்தப்படாமையால் வடிச்சல் வாய்க்கால்கள் மற்றும் மதகுகள் தூர்ந்துகாணப்பட்டன. அத்துடன் சின்ன முகத்துவாரத்தினுடாகவும், கழியோடையூடாகவும் மற்றும் பிரதான
பாதையூடாகவும் கடலை சென்றடையும் வடிச்சல் நீர் மேற்படி பிரதேசங்களில் தேங்கி நிற்பதனால் குறித்த 8500 ஏக்கர் காணிகளும் நீரினுள் அமிழ்ந்து காணப்பட்டது. இதனை மீட்டெடுக்கும் முயற்சியாக இவ் வேலைக்கு மிகபொருத்தமான மண் அகழும் இயந்திரசாதனமொன்றை (னுசநனபநச) கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களம் ரூபா 19 மில்லியன் செலவில் கொள்வனவு செய்தது மேற்படி வடிச்சல் வேலைத்திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த ஏதுவாக அமைகின்றது என்பதில் ஐயமில்லை


திருகோணமலை மாவட்டத்தில் நீர்ப்பாசனத்துறையின் ஊடாக விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு பெருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்டத்தின் கீழ் மொத்தம் 17 நீர்ப்பாசனதிட்டங்களுக்கு 85 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான வேலைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இந் நிதி மூலம் வெள்ளப்பாதிப்பினால் தூர்ந்து போயுள்ள அனைத்துக் குளக்கட்டுகளும், கால்வாய்களும் மற்றும் விவசாய அணுகு பாதைகளும் செப்பனிடப்பட்டுகொண்டிருகின்றன. இதனூடாக சுமார் 6,500 ஏக்கர் விவசாயக் காணிகள் நீர்ப்பாசன
வசதிகளைப் பெறுவதுடன் 3,000 விவசாயக் குடும்பங்களும் நன்மையடையவுள்ளன.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரிவிலுள்ள நீலப்பனிக்கன் குளத்தின்  வேலைகளுக்காக 24 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டு அவ்வேலைகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன. இக்குளத்தைப் பயன்படுத்தி சுமார் 1,140 ஏக்கர் விவசாயக் காணிகள் நீர்ப்பாசன

வசதிகளைப் பெறுவதுடன் 380 விவசாயக் குடும்பங்களும் நன்மைபெறுகின்றன. கிழக்கு மாகாணத்தில் மேலும் நீர்ப்பாசனதுறையை முன்னேற்றுமுகமாக அரசாங்கம் அவசர இயற்கை  அனர்த்த புனரமைப்புத் திட்டத்தின் ஊடாக நீர்ப்பாசன கட்டமைப்புக்களை நிர்மாணிக்கவும் புனரமைப்பு  செய்யவும் மூன்று மாவட்டங்களுக்குமாக 242 மில்pயன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அநேகமான வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளதுடன் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பெரிய குளம் ,பரவிபாஞ்சான் குளம் மற்றும் கல்மிடியாவ குளம் என்பன 37 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனருத்தானம் செய்யப்பட்டு ஆளுநர் , கிழக்கு மாகான முதலமைச்சர்   அபிவிரத்தி நீர்ப்பாசன அமைச்சர் அவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த ஒக்டோபர் மாதம் 12ம் திகதி 2013ம் ஆண்டு விவசாயி;களிடம் கையளிக்கப்பட்டதன் மூலமாக 2000 ஏக்கர் விவசாய காணிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெறுவதுடன் 550 விவசாயக் குடும்பங்களும் நன்மைபெறுகின்றன. அதேபோல் மட்டக்களப்பு ,அம்பாறை மாவட்டங்களிலும் இத்திட்டத்தினூடாக செய்யப்பட்ட வேலைகள் நிறைவடைந்து இவ்வருட இறுதிக்குள் மக்களிடம் கையளிக்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது

சுபீட்சமான நீர்ப்பாசன மரபுரிமைகள் மூலம் போஷிக்கப்பட்ட நீர்சார்ந்த கலாச்சாரமொன்று கிழக்கிலங்கைக்குச் சொத்தாகக் கிடைத்துள்ளது. நிலைபேறான பயன்பாட்டிற்காக நீர்வளத்ததையும் நிலவளத்தையும் அபிவிருத்தி செய்வதன் மூலமும் முகாமைப்படுத்துவதன் மூலமும் இப்பாரம்பரியங்களை பேணும்; பொருட்டு எமது நீர்ப்பாசனத் திணைக்களமானது அர்ப்பணிப்புடன் மென்மேலும் சேவையாற்றிவரும்
என்பதனையும். நெற்பயிர்ச்செய்கைக்கு நீரை வழங்குகின்ற அதே வேளையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேசத்தினதும் ஏனைய நீர்த்தேவைகளையும் இயன்றளவு நிறைவேற்றிக்கொள்வதற்காக எமது  கொள்கைகள், திட்டங்கள், நிகழ்ச்சித்திட்டங்கள் என்பவை வகுக்கப்பட்டுள்ளது