பட்டிருப்பில் நாமல் ராஜபக்ஷ அவர்களின் அனுசரணையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்குகள்

(கிருதஞ்ஞன்)
'நாளைய உலகை வெற்றிகொள்ள அறிவு ஞானத்தை வளர்ப்போம்' எனும் தொனிப் பொருளில் 'தாருண்யட்ட ஹெடக்' அமைப்பின் தலைவரும் அம்பாந்தோட்டைப் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அவர்களின் அனுசரணையுடன் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான முன்னோடிக் கருத்தரங்குகள் நாட்டின் சகல வலயங்களிலும் நடைபெற்று வருகின்றது.
இந்த வகையில் இன்று (25.07.2014) பட்டிருப்பு கல்வி வலயத்தில் 3 நிலையங்களில் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்றது.
இச் செயலமர்வின் சம்பிரதாயபூர்வமான நிகழ்வு மட்/பட்/களுதாவளை மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. 'தாருண்யட்ட ஹெடக்' அமைப்பின் திட்ட இணைப்பாளர் திரு.பிரதீப், பட்டிருப்பு வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன், முன்பள்ளி இணைப்பாளர் திரு.ந.புவனசுந்தரம் ஆகியோர் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.