களுதாவளை மகா வித்தியாலய மாணவிகளுக்குக் கௌரவம்

 (சக்தி)

கிழக்கு மாகாண கல்வித்தினைக்களத்தினால் நடாத்தப்பட்ட தமிழ் பாட கருத்தரங்கின் போது  தேசிய மட்டதமிழ்த் தினப் போட்டியில் வெற்றியீட்டிய களுதாவளை மகா வித்தியாலய மாணவிகள் கௌரவிக்கப்பட்டனர்.

 இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் பட்டிருப்பு வலயத்தினை சேர்ந்த மகாணவர்களுக்கான பரிட்சை வழிகாட்டல் கருத்தரங்கு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கான உதவிக் கல்விப்பணிப்பாளர்(தமிழ்) எஸ். நகராசா தலைமையில் களுதாவளை மகாவித்தியாலய ஒன்று கூடல் மண்டபத்தில் நடை பெற்றது.

இந் நிகழ்வில் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் எஸ். மனோகரன் கிழக்கு மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளர் (தமிழ்) கலாநிதி. எஸ். சிவநித்தியானந்தா கிழக்கு மாகாண தமிழ் பிரிவுக்கான இணைப்பாளர்   க.விக்னராசாஇ பட்டிருப்பு பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ். ஞானராசா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்த இந் நிகழ்வின் போது கவிதை ஆக்கத்தில் முதலமிடம் பெற்ற மாணவி செல்வி.து. வுகாரி மற்றும் எழுத்தாக்கத்தில் மூன்றாமிடம் பெற்ற மாணவி செல்வி க. ஹீப்றதா அகியோருக்கு மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளரினால் பரிசுத் தொகை வழங்கிக் கௌரவிக்பட்டது.

இதன் போது இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் பெறுபேற்றினை அதிகரிக்கும் முகமாக பாட விடயமடங்கிய கையேடு வழங்கப்பட்டு அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது